ஈழ மக்களின் உரிமையை மறுதலித்த அரசின் ஒடுக்குமுறைகள் போலிச் சுதந்திரத்தின் பின்னர் அதிகப்படுத்தப்பட்டு வந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது அகிம்சையில் இருந்து ஆயுதப் போராட்டமாக பரிணமித்து வந்தது.
சுயநிர்ணயத்திற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புடன் நேரடி ஆயுத போராட்டம் பெரும் அழிப்புடன் நிறுத்தப்பட்டது. அன்று மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட பார்த்துக் கொண்டு பார்வையாளர்களாக இருந்த ”சர்வதேச” சமூகம் இன்று நீதிவழங்கப் போகின்றதான் என ஈழமக்களை நம்ப வைத்திருக்கின்றது.
ஈழ தேசத்தின் மீதான ஒடுக்குமுறை தொடர்கின்றது. தன்னார்வ தொண்டு நிறுவன அரசியல் செய்பவர்களால் இனவழிப்பின் முறைமைகள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டினுள்ளும், புலனாய்வு நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாகவும், இராணுவம் சார் உற்பத்தியும், பௌத்தநாடாக்கல் என்பது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடைபெற்று 6 வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஈழ தேசம் அழிவை சந்தித்த போதும் அதில் இருந்து அரசியல் பொருளாதார ரீதியாக தன்மை மீளக் கட்டமைத்துக் கொள்ள முடியவில்லை. இதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்றது. தடைகள் என்பது அகத்தேயும், புறத்தேயும் உள்ளது. ஈழ தேசத்தின் இறைமையை மறுத்த கருத்துரைகள் பலமட்டங்களில் உள்ளது.
தேர்தலிற்குப் பின்னால் ஆட்சிக்கு வந்த தரகு முதலாளிய (சிங்கள- தமிழ்) வர்க்கத்தின் இணைவு என்பது ஈழ தேசத்தின் இறைமைக்கு எதிரான பெரும் தடைக்கல்லாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் தரகு முதலாளித்துவத்தை அதிகாரத்தில் இருந்தியுள்ள தேர்தல் என்பது தற்செயலாக நடைபெற்றதல்ல.
தரகு முதலாளித்துவம் (அன்னிய சக்திகளுக்காய் உழைப்பவர்கள், இணக்க அரசியல்வாதிகள் என ஏவலாளர்களாக செயற்படுபவர்கள்) முன்னெடுப்பதற்கு இரண்டு கட்சிகள் (பெரும்தேசிய கட்சிகள்) அவசியமற்றது எனவே இரண்டு கட்சிகள் இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு தரகுமுதலாளிகள் அன்னிய நிதிநிறுவனங்களின் நலன்களுக்காக சொந்த மக்களையும் நாட்டையும் காட்டிக் கொடுத்து செயற்படப் போகின்றவர்களே. இந்தநிலையில் சீன முகாமை தவிர்த்துக் கொள்வதற்காக இரண்டு கட்சிகளில் உள்ள மேலாண்மை; சக்திகள் இணைந்து செயற்படுகின்றன. இங்கு சீன முகாம் என்பது தற்காலிய முகாம் தோல்விக்கு உட்பட்டாலும் சீன பழைய மாதிரி உறங்கிய நிலையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும்.
தமிழ் பகுதியில் தேர்தல்
தேர்தலின் ஊடாக தரகு வர்க்கம் தான் தமிழ் தரப்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரகுவர்க்கத்தன் தெரிவு என்பது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தில் ஏற்பட்ட மீளவொரு தடையாகும். இந்த நிலையில் தேர்தல் முடிவை வைத்துக் கொண்டு த. தே. கூ பாதைதான் சரியாது என்றோ அல்லது மாற்றுப் பாதை இல்லை கற்பிதம் செய்வது சமூக வளர்ச்சிக் கோட்பாட்டை மறுத்துரைக்கும் சிந்தனை வடிவத்திற்கு அப்பால் ஒன்றுமில்லை. தமிழ் தரகு வர்க்கத்தின் பாதையை 1949 இருந்து 1982 வரையில் மாவட்ட அபிவிருத்தி சபையுடன் திருப்தி கொண்டடு சரணடைந்தது. பின்னர் மீளவும் 2009 பின்னர் தன் கையில் ”சுயநிர்ணயப்” போராட்டத்தினை தலைமை ஏற்றுள்ளது.
30 வருட போராட்டம் என்பது பல சாதகமான நிலையை தோற்றுவித்தாலும் 2009ல் இருந்து சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறு தரகு வர்க்கம் என்பது தனது எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கின்றது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கு மனிவுரிமைக் கூட்டத்தொடருக்கு அனந்தி, சுரேஸ், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அவர்களின் பயணம் என்பது அழுத்தங்களினால் தடைப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் வந்து எதுவும் சாதித்து விடப் போவதில்லை எனினும் இதில் இருந்து பெறும் செய்தி என்னவெனில் தேர்தல் என்பது மக்களின் சிறிய எழுச்சிக்குக் கூட பயங்கொள்கின்றது என்பதாகும். இது புலம் பெயர் சமூகத்தின் அல்லது வடக்கு கிழக்கு பகுதியிலாகட்டும் ஆளும் வர்க்கக் கூட்டு (தமிழ் – சிங்கள தரகுவர்க்கம்) செயற்படுகின்றது.
சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பது மக்கள் சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தாக இருந்து புரட்சிகர சிந்தாந்தத்தில் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு வெளியில் மாற்றுப் பாதை என்பது மக்கள் விரோதமானது, சுயநிர்ணயத்திற்கு எதிரான போக்கை கொண்டதாகும். இன்று இணக்க அரசியல் பாதையில் பயணிக்கும் அரசியல் தலைமையின் செயற்பாடுகளை உலக ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொள்ளும், அவர்களின் சமரசப் பாதையை போற்றிப் புகழும் இதில் இருந்தே மக்கள் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.
‘சர்வதேச விசாரணை’
இன்று தமிழ் மக்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் ‘சர்வதேச’ விசாரணை என்ற மண்குதிரையைச் சுற்றியதாகவே இருக்கின்றது. ஈழமக்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ”சர்வதேசம்” என்ற துரோகிகள் தம்மை கைவிட்டுச் சென்றார்கள் என்று அனுபவ ரீதியாக தெரிந்தே வைத்துள்ளார்கள்.
ஆனால் மக்கள் திரள் அரசியலை மறுதலித்த அரசியல் போக்கே அரசியல் தளத்தில் தலைமை தாங்குகின்றது. இந்த நிலையில் மக்கள் திரள் அரசியலை முன்னெடுக்கக் கூடிய இடதுசாரிகள் பலம்மற்ற நிலையில் உள்ள நிலையில் உள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று ”சர்வதேச” விசாரணை என்ற அபரிமித நம்பிக்கையாகக் கொண்ட அரசியல் போக்கு தன்னைத் தானே அம்பலப்படுத்தியே உள்ள நிலையில் ஈழ தேசத்தின் இறைமைக்கான போராட்டம் என்பது பக்க (அக) முரண்பாடுகளை ஜனநாயக ரீதியாக அணுகி அரவணைத்து உழைக்கும் மக்களின் தலைமையில் நடைபெற வேண்டிய வரலாற்றுக் கடமையை கொண்டதாக இருக்கின்றது.
மக்கள் மீது மேலாண்மை கொண்ட சக்திகளான தரகு வர்க்கம் என்பது ‘சர்வதேசம்’ என்ற மண்குதிரையை நம்பு என்று மீண்டும் மீண்டும் தம் இயலாமை அரசியலான இணக்க – சரணாகதி அரசியலை மக்கள் மீது திணிக்கின்றார்கள்.
போராளிகள் பயங்கரவாதிகளா?
ஈழ தேசத்திற்கான போராட்டத்தினை அரைநிலமானிய சிந்தனையில் இருந்து உருவாகிய குட்டிமுதலாளிய சக்திகளினால் தலைமை தாங்கப் பட்டது. குட்டிமுதலாளிய வர்க்கத்தின் தலைமையாகக் கொண்ட அமைப்பின் அமைப்புத் தவறுகள், போராட்டப்பாதைபற்றிய தவறுகள், அரசியல் வியூகம், தன்னை கட்டமைக்கப்பட்டவையாகவே இருக்கும். இது புலிகளின் அல்லது தலைமை என்பது இந்த சமூகத்தின் உற்பத்தியே அன்றி அதற்கு அப்பால் இருக்க முடியாது. தான் வலிந்து கொண்ட இலட்சிய வேட்கையில் தன்னுடைய நொந்த வர்க்க வெளிப்பாடுகளுக்கு ஏற்பட போராட்டத்தை நடத்தியது. ( புரட்சிகர வர்க்கத்திற்கான புரட்சிகர தத்துவம் என்பது இல்லாத காரணத்தினால் முள்ளிவாய்க்காலுடன் முடித்துக் கொண்டது) ஆனாலும் இந்தப் பலவீனங்கள் சர்வதேச உளவு நிறுவனங்கள், உள்வீட்டுச் சதி என்பன நந்திக்கரைவரை அழைத்துவரப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.
ஈழப்போராட்டத்தினை சிதைத்த சதியாளர்கள் தான் இன்று வெவ்வேறு ரூபத்தில் ”சுயநிர்ணயத்திற்கான” (போலி தீர்வான அதிகாரப் பகிர்விற்காக) போராட்டத்திற்கு தலைமையைக் கொண்டுள்ளது. தலைமை வகிக்கும் தரகு வர்க்கத்தின் குணாம்சம் காரணமாக மேற்குலகம் சார்ந்ததாகவே அன்று 1949 தொடக்கம் இன்றுவரை இருந்து வருகின்றனர்.
வெஜனத் தளத்தில் மேற்குசார்- தாராளவாத ஜனநாயகச் சிந்தனைக் (ஏகாதிபத்திய நலன்) கொண்ட சிந்தனையாக இருக்கின்றது. இந்தச் சிந்தனையில் இருந்துதான் போராட்டம் பற்றிய பார்வை சமூகமும் அதன் அங்கமான ஊடாகம், புத்திஜீவிகளும் அனுகின்றார்கள். மேற்குசார் பிரச்சாரத்திற்கும் நலனுக்கும் அடங்கிய சிந்தனையில் இருந்துதான் (ஏகாதிபத்தியங்களும்) இறைமைக்கான போராட்டங்களை அளவிட்டுக் கொள்கின்றார்கள்.
மேற்கின் கிருஸ்தவ ஜீவகாரூண்ய மையவாதச் சிந்தனையை ஏகாதிபத்தியம் நாலபக்கமும் விதைத்துள்ளது இந்தச் சிந்தனையைக் கொண்டு அளவிடும் போக்கு என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கின்றது. இந்தக் கருத்துருவாக்கிகள் தன்னார்வ சிந்தனையாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர், இலக்கியவாதிகள் என அனைவரிடமும் மேற்குசார் சிந்தனை நீதி நெறிதான் அளவுகோளாக இருக்கின்றது.
மேற்கு சிந்தனை வடிவத்தை
கலாச்சாலை அணுகுமுறைக் கண்ணோட்டம்
தன்னார் நிறுவனங்கள், ஜீவகாரூண்யம் என மிருகவதை, சுற்றாடல் மாசுபடல் என் தன்னார்வச் செயற்பாடுகள் ஊடாக சமூகத்தில்விதைக்கப்படுகின்றது.
மேற்கு சிந்தனை வடிவம் கொண்ட சிந்தனை வடிவம் என்பதைக் கொண்டே போராட்டங்களை தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தெரிவு செய்யப்பட்ட மனித உரிமை பற்றிய பிரஞ்ஞை என ஏகாதிபத்திய நலன் சார்ந்த பிரச்சாங்களுக்கு உட்பட்டு இயங்க சமூகத்தில் படித்த – வசதிபடைத்த பிரிவு இருக்கின்றனர்.
இவர்களே மனிதஉரிமை மீறல் என்றும், குழந்தை உழைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஏகாதிபத்திய நிதிநிறுவனங்கள் கட்டளை இடுகின்றன. ஆனால் போராட்டத்தில் சிறுவர்களை இணைத்துக் கொள்கின்ற போது குழந்தைப் போராளிகள் என்று வரையறுத்து மனித உரிமை பேசுகின்றன.
இயல்பான வளர்ச்சியை அடையவிடாது தடுத்தும் இயற்கையாக வாழ முற்படும் சமூகத்தின் மீது ஏகாதிபத்திய பொருளாதார உற்பத்தி முறையை திணிக்கின்றது.
தமது சந்தைக்காகவும் தமது நலனுக்காகவும் பயங்கரவாதத்தினை அழிப்பதன் பெயரால் விசக் குண்டுகளை போட்டு அழிக்கின்றார்கள்.
ஏகாதிபத்திய பொருளாதார சிந்தனை நலன் கொண்ட பிரச்சாரத்திற்கு பலியானவர்கள் புலிகளின் போராட்டத்தையே பயங்கரவாதமாக பார்க்கின்ற பார்வையை, அளவுகோளைக் கொண்டு போராட்டம் என்பதையே பங்கரவாதமாக பார்க்கும் பார்வையை நிலைநிறுத்துவதும் மக்கள் மீது திணிப்பதிலும் அக்கறையாக உள்ளார்கள்.
புலிகளின் அமைப்பு என்பதே முன்னர் கூறியது போல அரைநிலமானிய சிந்தனையின் மீது கட்டப்பட்டது. புலிகளிடம் ஏகாதிபத்திய ஜனநாயக விழுமியங்களின் மையவாதச் சிந்தனையில் இருந்து பார்ப்பது அபர்த்தமாகும். புலிகள் அமைப்பு தவறுகள் என்பதை அரசபயங்கரவாதத்திற்கு நிகராக நிறுத்துவது ஏகாதிபத்திய நலன் சார் அயோக்கிய அரசியலாகும்.
ஆனால் எதிர்காலத்தில் புதிய ஜனநாயகக் பண்புகளைக் கொண்டதாக அமைப்பு வடிவம் முன்னேறுவது மாத்திரம் அல்ல. அது புரட்சிகர அரசியலையும் முன்னெடுப்பதாகவும் இருக்க வேண்டும்.
இறுதியாக
மனித உரிமை ஆவலர்களை சில விடயங்களில் திருப்தி செய்ய வேண்டியதும் ஏகாதிபத்தியத்தின் அன்பு முகத்தைக் காட்டும் காட்சிக்கு உட்பட்டதாகும். இன்று இலங்கையின் ஆளும் வர்க்கமான ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இலங்கை (மங்களவின் உரையில் காணமுடியும்) சீர்திருத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதை முன்மொழிகின்றது இது மேற்குதேசங்களின் நலன்களுக்கு இசைவாக நடந்து கொள்ளும் என்ற உறுதிப்பாடாகும். இந்தச் சீர்திருத்தங்களை மேற்கு ஏகாதிபத்தியங்கள் வரவேற்று புகழப் போகின்றது. இந்தச் சொல்லாடல் என்பது வெவ்வேறு தளங்களைக் கொண்டதும் அதற்கான சமிக்கை என்பதை மேற்கிற்கு ஐ.நா அரங்கில் மறுபடியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.
சிங்கள புரட்சிகர சக்திகள் தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலைபற்றி மக்கள் இயக்கம் எடுத்து அணிதிரட்டியும் தமிழ் தேசத்திற்கான போராட்டத்தின் நியாயத்தையம் முன்வைத்துப் போராட வேண்டும். சிங்கள இடதுசாரிகள் சொந்த மக்களை அணிதிரட்டிப் போராடுவதன் ஊடாகவே சிங்கள மக்களும் விடுதலை பெற முடியும். இந்த வெற்றிடம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் அவர்களும், அரசும் இலங்கையில் விசாரணை என்ற மண்குதிரைக்கு சிங்கள பௌத்த மையவாதமும் இடம் கொடுக்கப் போவதில்லை.
தமிழ்; தரகு (ததேகூ) வர்க்கத்தின் வெளிப்பாடு என்னவெனில் நாங்களே எதிர்ப்பதற்கான சூழலை உருவாக்கக் கூடாது என்றும் அரசு செய்யும் நம்பலாம் என்று கூறுகின்றார். (சுமி)
போராடும் தேசம் நல்லெண்ணத்தை காட்டுவது என்பது வேறு இணக்க அரசியல் என்பது வேறானதாகும். இங்கு இணக்க அரசியலை தான் தமிழ் தரகுமுதலாளித்துவம் முன்வைக்கின்றது. இன்று தமிழ் தேசியத்தினை தலைமைதாங்கும் தரகு வர்க்கமானது தன்னை அப்பழுக்கற்ற தேசியவாதியாக தன்மை எவ்வளவுதான் கூவிக் கூவி தன்மை பிரகடனப்படுத்தினாலும் அரசியல் வெளிப்பாடுகளில் துரோகத்தனம் வெளிப்படுத்தப்பட்டு விடுகின்றது. இன்று ஈழ தேசத்தின் தலைமை என்பது (போலி தீர்வான அதிகாரப் பகிர்விற்காக) தரகுமுதலாளித்தின் கைகளில் உள்ளது என்பதை மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனாலும் இந்த சக்திகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பலவற்றை தமிழ் மக்கள் எதிர்க்கொள்ள வேண்டும்.
இவ்வாறான போலி அரசியல் கூத்துக்களை வெற்றி கொள்வதன் ஊடாகவே ஒடுக்கப்படும் மக்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பது வெற்றி கொள்ள முடியும்.
தரகு முதலாளி வர்க்கத்தை அன்னியப்படுத்துவதன் ஊடாக சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தினை முன்னெடுப்போம்.
”சர்வதேச” நீதியை தாண்டி சுயநிர்ணயத்திற்கான போராட்டம் தொடரப்பட வேண்டும்.