சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பயணிகளுக்கு நேர்ந்த சோகம்

10

 

பாகிஸ்தானில் சுற்றுலா பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் இருக்கும் பள்ளத்தில் சுற்றுலா பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தெரியவருவது,

15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ரஹிமாபாத் பகுதிக்கு அருகே சென்றபோது அதிவேகமாக திரும்பியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

SHARE