சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

471

சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் மத்தியில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.


தாயக நினைவுகளை ஒத்ததாய் அமைந்திருந்த சுவிஸ் சூரிச் மாநில சிவன் ஆலயத்தில் உட்பற வெளிப்புற அமைப்பு பக்தர்களின் மனங்களில் பாரிய இடம் பிடித்தது குறிப்பிடத் தக்கதுஅத்துடன் சாமி வீதிவலம் வந்ததுடன் தீர்த்ச் சடங்கு வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் பல்லாயிரம் பக்தர்களும் பக்தி பரவசத்துடன் தமது சமயக் கடமைகளையும் செய்ததுடன் பல உறவுகள் அன்பே சிவம் அமைப்பின் ஊடாக தாயக உறவுகள் பலருக்கு தங்கள் உதவிகளை செய்ததையும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய தேர்த் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள் (coolswiss.com)

சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா சனி (05.07.2014) அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் வழமைக்கு மாறாக பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கது.

தாயகத்தின் தன்மையினை ஒத்த வகையில் அமைந்திருந்த இச் சிறப்புத் தேர்த் திருவிழாவில் காவடி மற்றும் பல சிறப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் இதில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பல்லாயிரம் பக்தர்கள் எம் பெருமான் சிவனின் தேர்த் திருவிழாவில்

கலந்து கொண்டமை எமக்கு எம் தாய் மண்ணில் இருப்பது போன்ற உணர்வு உள்ளதாக தெரிவித்த அவர் தான் ஜெனிவா மாநிலத்திலிருந்து வந்ததாகவும் இது போன்று பல மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளர் என்று குறிப்பிட்டார்…

 

 

SHARE