சுவிஸில் உள்ள இலங்கையர் விபரத்தை திரட்டுவதில் தீவிரம்.

162

சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் பற்றிய விபரங்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Evening-Tamil-News-Paper_54270136357

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் 840 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சகோதர சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு புகலிடம் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிடவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகிய தரப்புக்கள் இவ்வாறு இலங்கையர்கள் சுவிட்சர்லாந்து செல்ல உதவியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்ட இவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருப்வர்களா? அல்லது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களா? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புகலிடம் பெற்றுக்கொண்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் 350 சுவிஸ் பிராங்குகளுடன் தங்குமிட மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

SHARE