சுவிஸில் திருமணம் செய்யாமல் குழந்தை பெறும் பெற்றோர்கள் எத்தனை? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

156

 

சுவிட்சர்லாந்து நாட்டில் முறையாக திருமணம் செய்துக்கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.சுவிஸில் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக சுவிஸ் புள்ளியியல் துறை அலுவலகம் அண்மையில் ஆய்வு ஒன்றை வெளியிட்டது.இந்த ஆய்வில், சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணமாக பிறப்பு விகிதமும் சராசரியாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.சுவிஸில் இந்தாண்டு புதிதாக பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 85,287 என்றும், இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2014ம் ஆண்டை விட 3.1 சதவிகிதம் அதிகம் என புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டவர்களின் குடியேற்றம் அதிகரிப்பதால், கடந்தாண்டை விட இந்தாண்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையானது 1.2 சதவிகிதம் அதிகரித்து 8.2 மில்லியன் எண்ணிக்கையில் உள்ளது.

இந்தாண்டு பிறந்த குழந்தைகளில் 43,900 ஆண் குழந்தைகள் என்றும், 41,400 பெண் குழந்தைகள் என்றும் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், திருமணம் ஆன பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் சுமார் 78.3 சதவிகிதம் ஆகும். எஞ்சிய 21.7 சதவிகித குழந்தைகள் முறையாக திருமணம் பதிவு செய்யப்படாமல் பிறந்த குழந்தைகள் ஆகும்.

மேலும், இந்த சதவிகிதமானது தொடர்ந்து அதிகரித்தும் வருவதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டை ஒப்பிடுகையில், சுவிஸில் திருமணத்திற்காக பதிவு செய்தவர்கள் 2014ம் ஆண்டு 5.3 சதவிகிதம் அதிகரித்து 41,900 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

1990ம் ஆண்டிலிருந்து சுமார் 40 ஆயிரம் திருமணங்கள் ஆண்டுதோறும் முறையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்மாறாக, விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 17,100 என்ற எண்ணிக்கையிலிருந்து 2014ம் ஆண்டு 16,700 என்ற எண்ணிக்கைக்கு குறைந்துள்ளது.

அதேபோல், சராசரி இறப்பு விகிதமும் 1.9 சதவிதத்தில் குறைந்து 63,900 என்ற எண்ணிக்கையில் உள்ளதாக புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE