சூப்பர்ஸ்டார் வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித்.. நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்

7

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் ஆரம்பம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சியின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது என ஏற்கனவே கூறப்பட்டது. இதற்காக தான் அஜித் தற்போது துபாய் சென்றுள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு
இந்நிலையில், துபாயில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை நேரில் அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

SHARE