சூர்யாவுக்கு, காலம் நல்ல பதிலை சொல்லும்! – கெளதம்மேனன்

383

சாதாரண நடிகராக இருந்த சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக உயர்த்திய பெருமை கெளதம்மேனனுக்கு மட்டுமே உண்டு. அவரது காக்க காக்க படத்தில் நடித்த பிறகுதான் சூர்யா மீது ஆக்சன் பட டைரக்டர்களுக்கு நம்பிக்கையே ஏற்பட்டது. அதற்கடுத்து வாரணம் ஆயிரம் என்ற படத்தில் அவரை நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகவும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் கெளதம்மேனன்.
அதன்பிறகு சூர்யாவுக்காக அவர் ரெடி பண்ணிய கதைதான் துருவநட்சத்திரம். முந்தைய படங்கள் வரிசையில் இதுவும் ஒரு நல்ல ஆக்சன் படமாக இருக்கும் என்றுதான் அப்படத்திற்கு பூஜையெல்லாம் போட்டார் கெளதம்மேனன் ஆனால், சிங்கம்-2வில் சீறிக்கொண்டு நடித்த சூர்யா, தனது திறமைக்கு தீனி போடும் கதைக்களம் நீங்கள் சொன்ன கதையில் இல்லையே என்று சொல்லிக்கொண்டு அந்த படத்தில் நடிக்காமல் எஸ்கேப்பானார்.
அந்த கதையைத்தான் இப்போது சில திருத்தங்களுடன் அஜீத்தை வைத்து இயக்குகிறார் கெளதம் மேனன். இந்த நிலையில, மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கெளதம்மேனனைக்கேட்டால், சூர்யாவுடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை., ஒரு இயக்குனராய் அவரை எப்படி ப்ரமோட் பண்ண வேண்டும் என்பதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால், இரண்டு படங்களில் நான் சொன்ன கதை பிடித்திருந்த நிலையில் இப்போது சொன்ன கதை பிடிக்கவில்லை என்று என்னை விட்டு விலகியிருக்கிறார்.
அதனால், அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஒரு கலைஞனாய் என் கதை அவருக்கு திருப்தி தரவில்லை அல்லது நம்பிக்கை கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன். ஆனால், சினிமாவில் அதிகமாக எதிர்பார்க்கிற கதைகள் தோற்றுப்போனதுண்டு, அதேபோல் எதிர்பார்க்காத கதைகள் பெரிய வெற்றியை கொடுத்ததும உண்டு. எதுவுமே நம் கையில் இல்லை. இது எனக்கு தெரிந்த அளவுக்கு சூர்யாவுக்கு தெரியுமா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. காலம் இதற்கு நல்ல பதிலை சொல்லும் என்று நம்புகிறேன் என்கிறார் கெளதம்மேனன்.
SHARE