செச்சின்யாவில் கடுமையான மோதல் – காணொளி

401

ரஷ்யாவின் தென் பிராந்தியமான செச்சின்யாவின் தலைநகரான குறொஸ்னியின் மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரவு நடந்த இந்த மோதலின் போது 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின் போது அலுவலக கட்டிடம் ஒன்றுக்கு தீவைக்கப்பட்டதுடன், அருகில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றில் தீவிரவாதிகள் நிலையெடுத்திருந்தனர்.

அந்த நேரத்தில் அந்தப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் இருந்தார்களா என்று தெரியவில்லை.

பிரிவினைவாதத் தீவிரவாதிகளும், ரஷ்யப் படைகளும் கடுமையாக மோதிக்கொள்ளும் இந்தப் பிராந்தியத்தில் நீண்ட காலமாக அமைதியாக இருந்த பின்னர் இப்போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இவை குறித்த காணொளி.

SHARE