ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை வேட்பாளர் செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் பண்டாரவளை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகியதுடன், செந்தில் தொண்டமான் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் செந்தில் தொண்டமானின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற வாகனமே பண்டாரவளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்தை எதிரே வந்த வாகனம் மோதியது என்றும், அந்தச் சாரதி வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.