சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம் திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும்-மர்ம நபர் மிரட்டல்

544

 சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம்திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24ம் திகதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் வாக்கு என்னும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளுக்கு பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைகழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணிமேரி கல்லூரியில் இரவு, பகலாக போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் காவல் கட்டுப்பட்டு அறைக்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 16ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் வாக்கு என்னும் 3 மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும் என  கூறியுள்ளார். உடனடியாக காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டு நள்ளிரவில் வாக்கு என்னும் மையங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பட்டு அறைக்கு வந்த மர்ம அழைப்பால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.  

SHARE