சென்னை அணியை முனிச் விபத்துடன் ஒப்பிட்ட அஸ்வின் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

264

முனிச் நகரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் விபத்துக்குள்ளான சம்பவத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒப்பிட்ட அஸ்வினை சென்னை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணிக்குத் தடை நீக்கப்பட்டதையடுத்து, வீரர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.

சென்னை அணியின் மற்றொரு வீரரான அஸ்வின், 1958-ம் விபத்துக்குப் பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் அணி வீறுகொண்டு எழுந்தது. அது போலவே, சி.எஸ்.கேயும் எழுச்சிபெறும் என ட்வீட் செய்திருந்தார்.

1958ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் சென்ற விமானம், முனிச் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. அதில், எட்டு மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துயரமான அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டு வர, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இரண்டு ஆண்டு காலம் பிடித்தது.

அஸ்வினின் ஒப்பீட்டை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், விபத்தையும் குற்றத்தையும் இணைந்து ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

SHARE