சென்னை அரசு திரைப்பட கல்லூரி அட்மிஷன் தொடங்கியது: சினிமா ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

450

சென்னை தரமணியில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி. இங்கு சினிமா தொடர்பான அனைத்து படிப்புகளும் குறைந்த கட்டணத்தில் சொல்லித் தரப்படுகிறது. சமீபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அரசு இதனை புதுப்பித்திருப்பதோடு, டிஜிட்டல் தொழில்நுட்ப படிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஊமை விழிகள் ஆபாவாணனில் இருந்து பி.சி.ஸ்ரீராம் வரையிலான பல திறமையாளர்கள் இங்கிருந்துதான் வந்தார்கள். தற்போது இதில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிறுவன பொறுப்பு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள். ஒளிப்பதிவு, ஒலிப்பதி, மற்றும் சவுண்ட் என்ஜினீயரிங், எடிட்டிங், படம் பதனிடுதல், ஆகிய 4 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் இயக்குனர் பிரிவில் சேரலாம். அரசு மற்றும், அரசு அங்கீகாரம்பெற்ற ஓவியம் மற்றும் கலைக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் பிஎஸ்சி விஷ¨வல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா, அனிமேஷன் மற்றும் விஷ§வல் எபெக்ட்ஸ், ஆகிய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒவியத் திறமை பெற்றவர்கள் உயர்ப்பூட்டல், மற்றும் காட்சிபயன் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
2014&15ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் ஜுன் 2ந் தேதி முதல் வழங்கப்படும், தமிழக அரசின் இணைய தளத்திலும் டவுன் லோட் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
SHARE