சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி நேற்று தனது மகளுடன் விளையாட்டு மைதானத்திற்குள் வந்திருந்தார்.

332
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி நேற்று தனது மகளுடன் விளையாட்டு மைதானத்திற்குள் வந்திருந்தார்.பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் அணியை வீழ்த்தியது.

சென்னை அணித்தலைவர் டோனி, தனது மகள் ஷிவாவை கொண்டு வந்திருந்தார். 2 மாத கைக்குழந்தையான ஷிவாவை டோனி மைதானத்திற்கு கொண்டு வருவது இதுவே முதல் முறை ஆகும்.

போட்டி தொடங்கியதும் டோனியின் மனைவி சாக்ஷியின் கையில் இருந்த ஷிவாவை அடிக்கடி கமெராக்கள் காட்டிக் கொண்டிருந்தன.

SHARE