உலகிலேயே முதன் முறையாக நான்கு வயது சிறுவனுக்கு செயற்கை கணையம் பொருத்தப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த நான்கு வயது சிறுவன் சேவியர் ஹாமெஸ்.
முதல் வகை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சேவியரின், உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து மாரடைப்பு, கோமா நிலைக்கு தள்ளப்படும் அபாய நிலையை எதிர்நோக்கி இருந்தான். எனவே செயற்கை கணையத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதாவது, சர்க்கரையின் அளவு அபாயகரமான நிலையில் குறையும் பட்சத்தில் அதனை கண்டறிந்து இன்சுலின் சுரப்பதை தடுத்து நிறுத்தக்கூடிய செயற்கை கணையத்தை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். இதுகுறித்து பெர்த் பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனையை சேர்ந்த பேராசிரியர் ரிம் ஜோன்ஸ் கூறுகையில், முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கையை இந்த கருவி மிகவும் எளிதாக்கும் என்றும், பெரியவர்களுக்கும் பொருந்தக்கூடிய இந்த கருவியை நான்கு வருடங்கள் வரை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார். |