செல்ல நாய் உங்களை நக்குவதற்கான காரணம் தெரியுமா?

761
வீட்டில் செல்லப்பிராணிகள் என்றாலே ஏராளமானவர்கள் வீட்டில் அதிகமாக வளர்க்கப்படுவது நாய் தான்.ஏனெனில் நாய்கள் நல்ல நன்றியுடன் நடப்பதுடன், நல்ல துணையாகவும் இருக்கும்.

அப்படிப்பட்ட நாயை வளர்க்கும் போது, நாய்க்கு இருக்கும் ஒரு பழக்கம் நம்மைக் கண்டவுடன் ஓடி வருவது, நம்மை நக்குவது.

இந்த செல்லநாய்கள் ஏன் நக்குகிறது என்று தெரியுமா?

* குட்டி நாய்கள் பசிக்கும் போது, அதை வெளிப்படுத்துவதற்கு நக்க ஆரம்பிக்கும். ஆகவே உங்கள் வீட்டில் குட்டி நாய் இருந்தால், அது உங்களை நக்க ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.

* நாய்கள் கூட மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படும். இத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு, நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்துவதற்கு, நாய்கள் தம்மை தாமே நக்க ஆரம்பிக்கும்.

* மனிதனின் உடலில் சுரக்கும் உப்பின் சுவையானது நாய்களுக்கு பிடிக்கும். அதன் காரணமாகவும், நாய்கள் அவ்வப்போது நக்குகின்றன.

* சில நேரங்களில் நாய்கள் தங்களது உணர்ச்சியை நக்குவதன் மூலம் வெளிப்படுத்தும். உதாரணமாக, நீங்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நுழைந்தால், உங்கள் நாயானது ஓடி வந்து, உங்களை நக்க ஆரம்பிக்கும்.

ஏனெனில் அது உங்களை அவ்வளவு நேசிக்கிறது. ஆகவே நீங்கள் வந்த சந்தோஷத்தை நக்குவதன் மூலம் வெளிப்படுத்துகிறது.

* நாய்களுக்கு காயம் அல்லது வலி இருந்தால், அதனை சரிசெய்ய, அது தம்மை தாமே நக்கிக் கொள்ளும்.

ஏனெனில் நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொள்ளும் நொதிகள் உள்ளது. இருப்பினும் அதிகமாக நக்கும் போது, அது காயத்தை இன்னும் பெரியதாக்கிவிடும்.

எனவே நாய்கள் அப்படி காயத்தின் மீது நக்க ஆரம்பித்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

SHARE