செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த கியூரியாசிட்டி விண்கலம்: போட்டோக்களை அனுப்பியது

152

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் ‘செல்பி’ எடுத்து போட்டோக்களை அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கியூரியாசிட்டி விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அங்கு அந்த விண்கலம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அங்குள்ள மலைகள், பாறைகள், மண்ணின் தன்மை, செவ்வாய் கிரகத்தின் அமைப்பு உள்ளிட்டவற்றை போட்டோக்களாக எடுத்து அனுப்பியுள்ளது.

தற்போது அது தனது ‘ரோபோட்டிக்’ கரங்களால் செவ்வாய் கிரகத்தை ‘செல்பி’ எடுத்துள்ளது. அது குறித்த போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த வாரம் செவ்வாய் கிரகத்தில் ‘மரியாஸ் பாஸ்’ என்ற பகுதிக்கு நகர்ந்து சென்ற கியூரியாசிட்டி அங்கு பாறையை துளையிட்டு மாதிரியை எடுத்தது. அப்போது தனது ‘ரோபோட்டிக்’ கைகளால் அதில் உள்ள கேமராவின் மூலம் ‘செல்பி’ எடுத்து அசத்தியது.

‘மரியாஸ் பாஸ்’ பகுதியில் மலை மீது ஏறுவது போன்றும் ‘செல்பி’ எடுத்து அனுப்பியுள்ளது. இது அங்கு நடத்தப்படும் ஆய்வின் முன்னேற்றத்தை காட்டுவதாக ‘நாசா’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

SHARE