சேர்.பொன் இராமநாதன் முதல் இரா.சம்பந்தர் வரை-உலகம் முழுவதும் திரண்டே தமிழர்களின் விடு தலைப் போராட்டத்தை முடக்கியது. சர்வதேசத்திற்கும் இலங்கை அரசுக்கும் தமிழர்களின் ஆயுதப் போராட் டத்தின் வல்லமை-வலிமை எத்தன்மையது என்பது நன்கு புரியும். ஆனால் இரா.சம்பந்தர் மட்டும் அதனைப் புரிந்து கொள் ளாமல் நடந்து திரிவதுதான் வேதனைக்குரியது.

393

 

இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது தமிழ் இனம் தோற்றுப்போன இனமாகவே தெரிகிறது. இந்த நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க விடம் சேர்.பொன் இராமநாதன் தோற்றுப்போனார். இராமநாதன் நினைத்திருந்தால் தமிழர் தாயகம் என் பதை உருவாக்கி இருக்க முடியும்.

ஆனால் இலங்கைத் திருநாடு என்பது அவரின் பார்வையாக இருக்க, சிங்களத் தலைவர்கள் இலங்கை தமக்குரிய நாடு என்பதில் கவனம் செலுத்தினர்.
இதன் காரணமாக தமிழ் இனம் இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து போனது. இராமநாதனின் வரிசையில் தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், இரா.சம்பந்தர் போன்ற தலைவர்களும் தமது கொள்கையில் தோற்றுப் போனவர்க ளாகவே இருக்கின்றனர்.

தமிழினத்தின் தலைவர் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற ஆய்வு இங்கு அவசியப்படுகின்றது.
இந்த வகையில் தமிழ் தலைவர்கள் எதையும் எளி தில் நம்புபவர்களாக; இராஜதந்திர வியூகங்கள் தெரியாதவர்களாக; மற்றவர்களின் வரவேற்பில் உள்ளம் பூரிப்படைபவர்களாக; மாலை மரியாதைகளில் தங் களை இழந்து போகின்ற பலவீனங்களை உடையவர்களாக இருந்ததன் காரணமாக அவர்களின் அரசி யல் தோல்வி காணலாயிற்று.

ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்திற்குப் பின்னர் கூட இரா.சம்பந்தர் தமிழ் இனம் மிகவும் பலவீனப்பட்ட இனம் போல நடந்து கொள்கின்றார். ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களை ஈன்று புறம் தந்த இந்த ஈழத் திருமண் வீரத்தின் விளைநிலம்.
உலகம் முழுவதும் திரண்டே தமிழர்களின் விடு தலைப் போராட்டத்தை முடக்கியது. சர்வதேசத்திற்கும் இலங்கை அரசுக்கும் தமிழர்களின் ஆயுதப் போராட் டத்தின் வல்லமை-வலிமை எத்தன்மையது என்பது நன்கு புரியும்.

ஆனால் இரா.சம்பந்தர் மட்டும் அதனைப் புரிந்து கொள் ளாமல் நடந்து திரிவதுதான் வேதனைக்குரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சி யும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின நிகழ்வின்போது மேடையில் நின்ற இரா.சம்பந்தரிடம் சிங்கக் கொடியைக் கொடுத்து தூக்கிப் பிடியுங்கள் என்று ரணில் கூறிய போது, ரணிலின் ராஜதந்திரத்தை முறியடிக்கத் தெரியாமல் சம்பந்தர் கொடி பிடித்த வர லாறு, எங்கள் அரசியல் தலைவர்களின் தோல்விக் கான காரணத்தை காட்டிக் கொடுக்கும் என்று நம்புகின்றோம்.

இதேபோலத்தான் எல்லா விடயங்களிலும் தோல்வி யின் புரையோடல்கள் காணப்படுகின்றன. அண்மை யில் மகிந்த ராஜபக்­ யாழ்ப்பாணம் புகையிரத நிலை யத்தை திறந்து வைத்தபோது அந்த நிகழ்வில் கலந்து கொள்வதை புறக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தொடர்ந்து ஒரு சில வாரங்களின் பின்னர் பாராளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித் ததை அடுத்து மகிந்த ராஜபக்­ வழங்கிய தேநீர் விருந்து பசாரத்தில் கலந்து கொண்டு மகிந்தவை ஆரத்தழுவிய போது எங்கள் அரசியல் தலைமைகளின் ஆரோக்கி யமற்ற தீர்மானங்கள் தெரிய வந்தன.
இப்போது கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் இரா.சம்பந்தர் கலந்து கொண்ட சூடு ஆறுவதற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்த கதை எங் கள் தமிழ் அரசியல் தலைமைகளின் இராஜதந்திரம் எப்படி உள்ளது என்பதற்கு நல்ல உதாரணம்.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர் களுக்கு கிடைக்காமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டு என்று உணர்ந்திருந்தால், கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தேர்தல் நடத்துங்கள் என்றே சம்பந்தர் ஜனா திபதியிடம் கேட்டிருப்பார். சம்பந்தரின் பலவீனமான முடிவுகள் கிழக்கு மாகாண சபையை முஸ்லிம்களுக் காக்கியது.

அரசியல் வியூகங்கள் தெரியாமல் இருந்து விட்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று கூறுவது மடமைத்தனமானது.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் இனத்திற்காகவே பாடுபடுவார்கள்.

எதுவாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தர் தனது சொந்த இடமான கிழக்கு மாகா ணத்தை முஸ்லிம் இனத்திற்கு தாரை வார்த்ததை நபிகள் நாயகத்தின் மீது எனக்கு மிகுந்த பக்தி உண்டு என்று சொல்லியா சமாளிக்க முடியும்?

எங்கள் ஈழம் இது தமிழீழம்'s photo.
எங்கள் ஈழம் இது தமிழீழம்'s photo.
எங்கள் ஈழம் இது தமிழீழம்'s photo.
Like ·  · 
SHARE