சொந்த இடத்தில் புதிய வீடு கட்டும் தொகுப்பாளினி மணிமேகலை

7

 

இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி லட்சக் கணக்கான ரசிகர்களை பெற்றவர் மணிமேகலை. அந்த தொலைக்காட்சியில் அவர் ஏகப்பட்ட ஷோக்கள் நடத்தியுள்ளார், மேலும் அதே தொலைக்காட்சியில் இருப்பார் என்று பார்த்தால் வெளியேறி இருந்தார்.

அதன்பிறகு பெற்றோர்கள் சம்மதம் இல்லாததால் தான் காதலித்தவரை நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

திருமணத்திற்கு பின் மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் பணியாற்ற ஆரம்பித்தார். இப்போது தொடர்ந்து குக் வித் கோமாளியில் பங்கேற்பதும், சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதும் என பிஸியாக இருக்கிறார்.

மணிமேகலை புதிய வீடு

எப்போதும் தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வீடுவாக வெளியிடும் மணிமேகலை சில நாட்கள் முன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதுவேறு ஒன்றும் இல்லை அவர் சொந்தமாக வாங்கிய இடத்தில் புதிய வீடு ஒன்று கட்ட தொடங்கியுள்ளார்.

SHARE