சொந்த படத்தில் நடிப்பதால் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க ஜோதிகாவுக்கு சூர்யா அட்வைஸ் 

367




சொந்த தயாரிப்பில் ஹீரோக்கள் சிக்கனம் கடைப்பிடிப்பதில் கவனமாக இருக்கின்றனர். சமீபத்தில் விஷால் தான் தயாரிக்கும் ‘ஆம்பள‘ படத்தின் பாடல் கம்போசிங் செலவை ரூ.2,500க்குள் முடித்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து பட தயாரிப்பில் குதித்திருக்கும் சூர்யாவும் பட குழுவினருக்கு சிக்கனத்தை போதித்திருப்பதுடன் மனைவி ஜோதிகாவுக்கும் அட்வைஸ் தந்திருக்கிறாராம். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் ஜோதிகா. நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. மலையாளத்தில் ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ‘ கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அவர் ரீஎன்ட்ரி ஆகிறார். இப்படத்தை சூர்யாவே தயாரிக்கிறார். தான் நடித்த படங்களில் ஜோதிகா அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் இப்படத்தை பொறுத்தவரை ஓய்வே எடுக்காமல் வேலை செய்கிறாராம். ‘படத்துக்கான பட்ஜெட் இவ்வளவுதான். இதில் ஓய்வு எடுத்தாலோ, ஷூட்டிங் தாமதமானாலோ பட்ஜெட் செலவு அதிகரிக்கும். அது பட விற்பனையை பாதிக்கும். எனவே முடிந்தவரை ஓய்வு எடுக்காமல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்று ஜோவுக்கு சூர்யா அட்வைஸ் கொடுத்தார். அதை மனதில் வைத்து ஓய்வே எடுக்காமல் படப்பிடிப்பில் பங்கேற்கும் ஜோதிகா, அந்த நேரத்தில் செல்போன் அழைப்பு வந்தாலும் அதை தவிர்ப்பதற்காக சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடுகிறார்

 

SHARE