என்னுடைய சொந்த வாழ்க்கையே மறந்துபோச்சு என ஆதங்கப்படுகிறார் பாமா.‘எல்லாம் அவன் செயல்’, ‘ராமானுஜம்’ படங்களில் நடித்திருப்பவர் பாமா. அவர் கூறியது:நடிக்க வந்த புதிதில் முடிந்தவரை நிறைய படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். பிறகு தேர்வு செய்து படங்களை ஏற்ற பிறகுதான் என் வேலை எளிதானது. மலையாளத்தில் இப்போது ஒரு படம் மட்டுமே நான் நடித்து வெளியாக வேண்டி உள்ளது. அதேபோல் கன்னடத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆக வேண்டி இருக்கிறது. சமீபத்தில்தான் எனது பட்டபடிப்பை முடித்தேன். இப்போது சுதந்திர பறவை ஆகிவிட்டேன். வரும் டிசம்பரில் ஒரு படம்கூட நடிக்காமல் மாதம் முழுவதும் ரிலாக்ஸாக பொழுதை கழிக்க உள்ளேன்.
நடிக்க வந்தபிறகு எனது சொந்த வாழ்க்கையை மறந்துவிட்டு வேலை வேலை என்று சுற்றிக்கொண்டிருந்தேன். அதிலிருந்து விடுபட விரும்புகிறேன். இது நான் எடுத்திருக்கும் நல்ல முடிவு. சமீபத்தில் மேடை நிகழ்ச்சிக்காக இங்கிலாந்து சென்றேன். 15 நாட்கள் லண்டன் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்றேன். எந்த இடத்துக்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள உணவை ஒரு கை பார்ப்பது வழக்கம். ஆனால் இம்முறை எந்த இடத்தில் இந்திய உணவு கிடைக்கிறது என தேடித் தேடி சாப்பிட்டேன். ஆனால் மனநிறைவாக சாப்பிட கிடைக்கவில்லை.இவ்வாறு பாமா கூறினார்