சொன்னதை மறந்துவிடும் “எம் நீசியா” என்ற வியாதியில் மஹிந்த

226

மஹிந்த ராஜபக்ச சொல்வதை மறந்து விடும் ஒருவகை நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆறு மாதங்களுக்கு முன் அவர் கூறிய சகலவற்றையும் மறந்து அவர் செயற்படுவது நன்கு தெளிவாகத் தெரிவதாக பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் அரசியலில் இனவாதம் கோஷமாகி மதவாதம் தாண்டவமாடுகிறது.

தேசியக் கொடியை விகாரப்படுத்த செயற்பட்ட அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் குரோதத்தை பரப்ப செயற்படுகிறார்.

எல். ரீ. ரீ. ஈ. உடன் அவர் கட்டி எழுப்பிய நட்புறவையும் அவர் மறந்து உள்ளார். 800 மில்லியன் ரூபாவை ராடா நிறுவனம் ஊடாக நேரடியாக பிரபாகரனின் கைகளில் வழங்கிய வரும் மஹிந்தவே.

இதனால் பிரபாகரனின் ஆசிகளுடன் 2005 ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி ஈட்டினார்.

அந்த வகையில் பிக்குமார் படுகொலை மற்றும் 600 பொலிஸாரின் வாழ்வை ஒழித்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஸ்ரீ ல. கட்சியில் உப தலைவர் பதவி வழங்கிய வரும் மஹிந்தவே.

பிள்ளையானுக்கு கிழக்கின் முதலமைச்சர் பதவியையும் மஹிந்தவே வழங்கினார். இவை எல்லாம் “எம் நீசியா” என்ற நோய் ஏற்பட்டுள்ள மஹிந்தவுக்கு மறந்து விட்டது.

மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் இனவாதக் குழுவின் குறுகிய அரசியல் காரணங்களுக்காக நாட்டை தீ மூட்டுவதை உடன் நிறுத்த வேண்டும். இனவாதமே மஹிந்தவின் சகல தேர்தல் போராட்டங்களிலும் கோஷமாக அமைந்தது.

ஜனவரி எட்டாம் திகதி மக்கள் இந்தக் கோஷத்தையே நிராகரித்தனர். தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும் இக்கூட்டத்தில் நாட்டு மக்களை நன்கு விழிப்பதற்கான போராட்ட கோஷத்தை கண்டுபிடிக்க இடமுண்டு.

இவ்வாறு பிரதி அமைச்சர் அஜித் பீ. தெரிவித்து உள்ளார்.

SHARE