சோமாலியா அதிபர் மாளிகை மீது தாக்குதல்: அதிபர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

409
சோமாலியா அதிபர் மாளிகை சுற்றுச்சுவர் மீது இஸ்லாமிய போராளிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரால் மோதி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுகள் நிரப்பிய காரில் வந்த போராளிகள் சுற்றுச்சுவரில் காரை கொண்டு மோதியதாக கூறப்படுகிறது.

ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த படையினர் காரில் வந்த ஷபாப் இயக்கப் போராளிகள், ஐந்து பேரில் மூவரை சுட்டுக்கொன்று அதிபருக்கு ஆபத்து நேராமல் தடுத்துவிட்டனர். மீதமுள்ள இருவர் சுற்றுச்சுவரில் கார் மோதிய போது நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சரான அப்துல்லாஹி கோடா பாரே கூறியுள்ளார். நல்லவேளையாக இச்சம்பவம் நடந்த நேரத்தில் அதிபர், மாளிகையில் இல்லாமல் வெளியே சென்றிருந்ததால் உயிர் தப்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது பாராளுமன்ற வளாகம் மீது தாக்குதல் நடைபெற்றது.

கார் குண்டு மூலம் நடைபெற்ற அத்தாக்குதலில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு போலீஸ்காரர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE