சோமாலியா ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

163
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.இந்நிலையில் அந்த நாட்டின் துறைமுக நகரான கிஸ்மயுவில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் நேற்று நுழைந்தது. அதில் இருந்த தீவிரவாதி, அந்த குண்டுகளை வெடிக்க செய்தார். இந்த கார் குண்டு வெடிப்பு காரணமாக அந்த பகுதியே குலுங்கியது. இதில் பலர் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாகவும், 30 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, “ராணுவ பயிற்சி முகாமில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்ததை நாங்கள் கேட்டோம். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்த சத்தமும் கேட்டது” என்றார். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது

SHARE