ஜடேஜாவின் சாதனையை அடித்து நொறுக்கிய ராஜஸ்தான் வீரர்!

24

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற ஜடேஜாவின் சாதனையை ரியான் பராக் முறியடித்துள்ளார்.

பிளேஆப் சுற்றை உறுதி செய்யும் தனது கடைசி லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் 2 கேட்சுகளை பிடித்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றின் ஒரு சீசனில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, சென்னை அணி வீரர் ஜடேஜா ஒரு சீசனில் 13 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது பராக் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்கள்:

ரியான் பராக் – 15
ரவீந்திர ஜடேஜா – 13
ரோகித் சர்மா – 13

SHARE