நடந்துமுடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால அவர்கள் வெற்றிபெற்றிருக்கின்றார். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, நாட்டிலே மாற்றம் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட சந்திரிக்கா பண்டாரநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என அனைவரும் இணைந்துதான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். இல்லையேல் இவ்வெற்றி சாத்;தியப்பட்டிருக்காது. இலங்கையில் சர்வாதிகாரத்தினையும், குடும்ப ஆட்சியினையும் ஒழித்து ஜனநாயகத்தினை நிலைநிறுத்தவேண்டும் என்பதோடு, அவர்களினது அடிப்படைக் கோட்பாடும் ஜனநாயகம் என்பது இலங்கைக்கானதாக இருக்கவேண்டும். வெறுமனே பெரும்பான்மைக்கானதாக மாத்திரம் இருக்கக்கூடாது.
வடகிழக்கு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. சிவில் காரியாலயங்களில் இராணுவத் தலையீடுகள் இருக்கின்றது. மக்களுடைய காணிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இக்காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறி பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டும். மக்கள் மீளக்குடியமர்வதற்கான நிலைமைகளை உருவாக்கி, அந்த மக்கள் தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டால் தான் ஜனநாயகம் என்பது உருவாகும். இங்கு வாழ்கின்ற மூவின மக்களுக்கும் ஜனநாயகம் ஒழுங்கான முறையில் கிடைக்கப்பெறவேண்டும் என தனது செய்தியில் தெரிவித்தார்.