ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வகையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சட்டம் உள்ளடக்க

371

 

Court-Case-2ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வகையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமையை பெற்ற இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்கு கோருவதற்கு முடியாது என்ற சரத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை வரையறுக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஒருவரின் பதவிகாலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்திருந்த இராஜதந்திர சிறப்புரிமைகளும் 19 வது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில், 18 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரத்து செய்யப்பட்ட 17 வது திருத்தமான சுயாதீன ஆணைக்குழு 19 வது திருத்தத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

3448762883_81857d6e36

MahindaPoster_CI

SHARE