பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை இலங்கைவாழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்றும் விசேடமாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கையினைவிடுத்திருந்தோம். மக்கள் எமது கருத்தினை கேட்டு வடகிழக்கில் தமிழ்பேசும் மக்கள் மைத்திரிபாலவிற்கு வாக்களித்து, இந்த விடயத்தினை சரிவரச் செய்துமுடித்திருக்கிறார்கள். கடந்த 5வருட காலமாக தமிழ் மக்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தது. இந்த ஜனாதிபதியின் வருகையின் தொடர்பில் மக்களிடம் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும். எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.
எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதும், அதகாரங்கள் எங்களது கைகளில் வரவேண்டும் என்பதும் தமிழ் மக்களினுடைய நீண்ட நாள் அபிலாஷை. அது நிறைவேற்றப்படவேண்டும். இந்த விடயங்களை புதிய அரசாங்கமும், புதிய ஜனாதிபதியும் அறிந்து செயற்படுவார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதனை நிறைவேற்றுவதற்கு எம்மால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம். நன்றி என்றார்.
&nbs