ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிறர் கையில்…

320

ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்று பிறர் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். காலியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதாகவும், தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் நண்பர் ஒருவர் தமக்க கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றில் உண்மை இருப்பதாகவே தாமும் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் தேசிய நிறைவேற்றுப் பேரவையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் சாசனத்தில் கிடையாத ஒன்று எனவம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய நிறைவேற்றுப் பேரவையின் நடவடிக்கைகளில் ஜே.வி.பியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஜே.வி.பி கட்சி இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக் காரியாலயமாகவே செயற்பட்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரதமர் அலுவலகத்தில் அறையொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால கூறுகின்றார் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாம் நேசிப்பதாகவும், சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் கைப்பொம்மையாக செயற்படுவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவனல்ல என தம்மை யாரும் குறிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தாம் கவலையடைவதாகவும், அரசாங்கம் தொடர்ந்தும் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கைப் பின்பற்றக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கு 2500 ரூபா சமுர்த்தி கொடுப்பனவை வழங்கியமைக்காக பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுவதில் எவ்வித பிரச்சினையும் தமக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE