ஜனாதிபதியைக் கிண்டலடித்ததற்காக அழகியொருவர் சிறையில் அடைப்பு

303
துருக்கியில் ஜனாதிபதிக்கு எதிராக கிண்டலான கவிதையை அந்நாட்டின் அழகி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் துருக்கியில் ஊடக சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதள பதிவுகள் ஒடுக்கபடுவதாகவும் புகார் எழுந்து உள்ளது.

இதனால் அரசுக்கு எதிராக நூற்றுகணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துருக்கி நாட்டின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக்(Merve Buyuksarac) தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் ஜனாதிபதிக்கு எதிராக கிண்டலான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த கவிதை மூலம் துருக்கி ஜனாதிபதி எர்டோகனை(Erdogan), அவர் களங்கப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம் இவர் மீது புகார் செய்யபட்டதையடுத்து, இவரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இவருக்கு 4 1/2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

SHARE