ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துப் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் இன்று வவுனியாவில் கலந்துரையாடியுள்ளனர்.-வடை போச்சே

394

 

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துப் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் இன்று வவுனியாவில் கலந்துரையாடியுள்ளனர்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்காத நிலையில் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான கருத்துக்களை மக்கள் மத்தியில் தெரிவித்து வந்தனர்

. இந்த நிலையில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்,

ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், சுத்தானாந்தா இந்து இளைஞர் சங்க தலைவரும் தமிழரசுக் கட்சி மத்தியகுழு உறுப்பினருமான ந.சேனாதிராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி உள்ளிட்ட பலர் இன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில், வன்னி தேர்தல் தொகுதிக்கென நியமிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ந.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ள பிரசார நடவடிக்கைகளை கூட்டமைப்பு தீவிரமாக மேற்கொள்ளும் என்று தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது.

SHARE