ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா

512
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான வேட்பாளருக்கே ஆதரவளிக்கப்படும்: சரத் பொன்சேகா
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளரை நிறுத்தும் போது சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பிரதான அரசியல் கட்சியொன்றின் வலுவான வேட்பாளரே பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.

வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் நபர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வதில் பயனில்லை. வலுவான ஓர் வேட்பாளருக்கு எனது ஆதரவு வழங்கப்படும்.

முக்கியமான அரசியல் கட்சியொன்றிலிருந்து வேட்பாளர் ஒருவரை நியமித்தால் அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி தலைமைக்காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE