ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! சம்பிக்க ரணவக்க

27

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கூட்டணி
இது குறித்து மேலும் கூறுகையில்,தேசத்திற்காக விரிவான அரசியல் கூட்டணியொன்று உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

பொதுவான இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.பொது நோக்கமொன்றுக்காக எமது பங்களிப்பினை வழங்கத் தயார்.

கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்கி அதன் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு நடைபெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

SHARE