எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெறுவோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அதன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு மலைஉச்சியை அடைவதற்க்கு சிறிதளவு தூரமேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிற்கான விஜயத்தின்போது விடுதலைப்புலிகள் சார்பு அமைப்பு எதனையும் சந்திக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கட்சியின் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாஸாவும் எதிர்வரும் தேர்தல்களில் கட்சிக்கு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.