ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்களில்யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு

439

 

 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்களில்யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு
 இன்று பிற்பகல் 2 மணி வரை யாழ்ப்பாணத்தில் 50.4வீத வாக்குகள் பதிவாகின

மட்டக்களப்பிலும் 48 வீத வாக்குகள் பதிவாகின.

இந்த இரண்டு இடங்களிலும் மாலை 4 மணிவரை 60 வீதமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 12 மணிவரை ஏனைய மாவட்டங்களில் 55 வீத வாக்குகள் பதிவானநிலையில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் 25வீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பை தடுக்கும் வகையில் குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் மாலை 6 மணி வரை வாக்களிக்க முடியும் என்ற செய்தியும் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில்  70வீத வாக்குகள் பதிவு

sri_sumanthiran_002

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று வாக்களித்துள்ளார்கள்.

தற்போது கிடைத்த தகவலின் பிரகாரம் வாக்குகள்  70வீதமாக பதிவாகியுள்ளது.

பச்சிலைப்பள்ளி 62 வீதமும், பூநகரி 76 வீதமும், கரைச்சி 70 வீதமும் கண்டாவளை 72 வீதமும் பதிவாகியுள்ளது. அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது மக்கள் கணிசமான அளவில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்

 

SHARE