ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

417

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விரைவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8720_content_susil premayayantha_2

சுசில் பிரேமஜயந்தவின் இந்த தீர்மானம் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் எனவும் இது மகிந்த ராஜபக்ச ஆதரவு அணிக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும் சாதக நிலைமையை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

சுசில் பிரேமஜயந்தவின் இந்த தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச அணியின் பிரமுகர் ஒருவர், இந்த தீர்மானம் தொடர்பில் சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE