ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மைத்திரியுடன் மகிந்த போட்ட புதிய டீல், “OUT”

291

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மகிந்த ஆதரவு அணியினரும் அந்த டீலிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறியே மைத்திரியிடம் தரகர்களை மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளார். எனினும், இரண்டாவது யோசனைக்கு இடமளியாமல் இதனை அந்த இடத்திலேயே மைத்திரி நிராகரித்து விட்டார் என்று தீபம் இணையத்தளத்திற்கு நம்பகரமாக அறியக்கிடைத்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் வட்டாரங்களிலிருந்து இந்த தகவலை தீபம் பெற்றுக் கொண்டுள்ளது.

Mahinda_rajapaksa_maithripala_sirisena

மீண்டும் அரசியலிற்குள் குதிக்கப் போகிறேன் என மகிந்த ஒரு பக்கத்தில் பாவனை பண்ணிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அவரது அடிப்பொடிகள் ‘கிளம்பு தல’ என உசுப்பேற்றியபடியிருக்கிறார்கள். மகிந்தவுடன் நாம் என பல கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளினால் மைத்திரி மிரண்டு போயிருப்பார் என மகிந்த கணக்குப் போட்டு வைத்திருந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு ஒரு டீலிற்கு மகிந்த எத்தனித்துள்ளார். மகிந்த ஆதரவு எம்.பி ஒருவர் ஊடாக மைத்திரிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினர், அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள், ஆதரவாளர்கள் மீது நடத்தப்படும் விசாரணைகள், பழிவாங்கல்களை நிறுத்தினால் அடுத்த பொதுத்தேர்தலில் மைத்திரியுடன் இணைந்து பணியாற்ற மகிந்தவும், அவரது ஆதரவாளர்களும் தயாராக உள்ளனர் என்பதே அந்த டீல்.

மைத்திரியின் நெருங்கிய உறவினர் ஒருவரின் துணையுடனேயே மைத்திரியிடம் இந்த யோசனையை மகிந்த ஆதரவு எம்.பி தெரிவித்திருக்கிறார்.

எனினும், அதனை கேட்ட மாத்திரத்திலேயே மைத்திரி நிராகரித்து விட்டார். ‘அவர் ஓய்வாக வீட்டிலிருப்பதே நாட்டிற்கும் அவரது உடலிற்கும் நல்லது. மீண்டும் வரும் பூச்சாண்டிக்கு நான் அச்சமடையவில்லை. இம்முறை அவருக்கு அச்சமடைவதைப் போல காட்டினால் ஒவ்வொரு விடயத்திலும் இந்த பூச்சாண்டியை காட்டுவார். இதனால் அவர் போட்டியிட்டு, கையை சுட்டுக் கொள்ளட்டும். அதன்பின்னர் வீட்டில்த்தானே முடங்கியிருப்பார்’ என மைத்திரி அந்த டீலை முடித்து விட்டார்.

 

SHARE