ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வந்த அரசியல்வாதிகள் பலர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளனர்.

180

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வந்த அரசியல்வாதிகள் பலர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளனர்.

Ranil-Maithri2

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக சிறிகொத்த கட்சி தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த தரப்பினருடன் இணைந்து எதிர்வரும் பொது தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளமை, அரசியல்வாதிகள் மனமுடைவதற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்புரிமை தெரிவு பணி மஹிந்த தரப்பினரின் கைக்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தில் இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் உட்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குகின்ற ஹிருனிக்கா பிரேமசந்திர போன்று மாகாண சபை உறுப்பினர்களும் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE