ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உரை.

441

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கட்சி தலைவர்களுக்கான விஷேட கூட்டம் 19-01-2015 இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான சுசில் பிரேம ஜயந்த,டிவ் குணசேகர ,தொண்டமான்,அதாவுல்லாஹ் ,அனுர பிரியதர்சன யாப்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முதலில் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர்
பாராளுமன்ற தேர்தல்-

தொகுதி முறைக்கு வருகின்ற பொழுது முஸ்லிம்கள் இந்த நாட்டிலே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது நிலை ஏற்படும் எனவும் இதனால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப் படுவார்கள் எனவும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கு தற்போது காலம் போதாத காரணத்தால் தற்போது அமுலில் இருக்கின்ற மாவட்ட மட்ட முறையில் தேர்தலை நடத்துமாறும் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் கூற்றை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தொகுதி முறையில் தேர்தல் நடைபெறாது எனவும் தற்போது அமுலில் இருக்கின்ற மாவட்ட மட்ட முறையில் நடைபெறுமென உறுதி மொழி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

SHARE