சிரியாவில் இருந்து நாடு திரும்பிய ஜிகாதிகளால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.கடந்த 18 மாதங்களில் பிரான்ஸ் புலனாய்வுதுறையினர் நாட்டில் ஏற்படவிருந்த 5 பயங்கரவாத செயல்களை தடுத்துள்ளனர்.
சிரியாவில் இருந்து திரும்பிய 4 ஜிகாதிகள் சில சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்கள் என உள்துறை அமைச்சர் பேர்னாட் காஸ்சென்யூ அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற 5 பயங்கரவாத சம்பவங்களுடன் நாடு திரும்பிய ஜிகாதிகள் அல்லது நாட்டில் இருந்து இன்னும் வெளியேறாதவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் கூறியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்திய தகவல்களை வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். |