ஜிம்பாப்வே போட்டியில் மிரட்டல்: புதிய மைல்கல்லை எட்டிய புவனேஷ்வர் குமார்

169
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வேகத்தில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.bhuwanshwar_001நேற்றைய போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இவரது வேகத்தில் மசகட்சா (5), சிகும்பரா (9), கிரிமர் (27), டிரிபனோ (6) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார் புவனேஷ்வர் குமார்.

SHARE