‘டார்லிங்’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, மனிஷா ஜித் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பே அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது இப்படத்தின் சிறப்பு. மேலும், இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகை சிம்ரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ப்ரியா ஆனந்தும் இந்த படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ப்ரியா ஆனந்த் நடித்தது குறித்து இயக்குனர் கூறும்போது, ப்ரியா ஆனந்த் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிப்பதன் மூலம் மேலும் ஒரு ஆச்சர்யத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழகிய நடிப்பை வெளிக்கொண்டு வரும் நாயகி வேண்டும் என்று எண்ணினோம். ப்ரியா ஆனந்த் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார். தனக்கே உண்டான உற்சாகத்தாலும், குதூகலத்தாலும் மொத்த படக்குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார் என்று கூறினார்.
இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நல்ல கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வெளியிடுவதில் கவனம் செலுத்தி வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வருகிற ஜுன் 4-ந் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியாகிறது