ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள் சிங்கள தேசம் இதனை மறக்காது

1221

 

karumpuligal

ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள்
சிங்கள தேசம் இதனை மறக்காது

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.

Kadarkarumpulikal-copy-600x337

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 27 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.

இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள்.

2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.

முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள்.

வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

|| தமிழீழத் தாயின் மடியில் வேடியாகிச் சென்ற தேசப்புயல்கள் – உயிராயுதங்கள் நினைவில் நீளும் வீரத்தின் தடங்கள்….

|| தமிழீழத் தாயின் மடியில் வேடியாகிச் சென்ற தேசப்புயல்கள் – உயிராயுதங்கள் நினைவில் நீளும் கவிதைகள்….

விடுதலை நோக்கிய எங்கள் பயணத்தில் தற்கொடையாய் தம்மையே அர்பணித்து எரிமலையாய் வெடிக்கும் எங்கள் தமிழ்மண் கண்டெடுத்த சூரியச் சுடர்கள் ஆம் எங்கள் கரும்புலிகள்…
ஏன் போர் ஏன் போர் என்று சொல்லாடுவோர்க்கு புரியாது சோதனையும் வலிகளும் அவர்கள் உணர்ந்ததில்லை தன் தாயை சகோதரியை பிஞ்சுக்குழந்தையைக் கூட வல்லுறவுக்கு உட்படுத்தும் வல்லூறுகளை அவர்கள் கண் எதிரே கண்டதில்லை ஆகவே அவர்களுக்குப் புரியாது.  சுமையின் அழுத்தம் அவர்களுக்கு விளங்காது விடுதலை வேண்டி நிற்கும் ஒரு சமூகத்தின் இரத்தம்.
நெருக்குப்பட்ட ஒரு சமுதாயத்தின் நெஞ்சுக்குமுறல்கள் அவர்களின் காதுகளுக்கு எட்டாது. ஏகே 47,ம் பீரங்கியும், புகாரா குண்டுகளும் பொழிகின்ற தேசத்தில் அஹிச்சை வழி நாடலாமே என்பவர்கள் கண்டதில்லை சப்பாத்துக் கால்களால் மிதிபடும் எங்கள் அண்ணன் தம்பி மேல் ஆளும்படை செய்கின்ற அட்டூழியங்கள்.
தொடர்கின்ற இந்த சிங்கள வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஆயுதம் தூக்குதல் அவசியமாச்சு. இருந்தாலும் நிராயுதபாணிகளையும் சமாதான காலத்தில் எந்த அதிகாரியையும் கொன்று யுத்த தர்மத்தை மீறவில்லை மறவர்கள்.
எத்தனை ஆயுதங்களை அள்ளி அள்ளி அடுத்த நாடு வழங்கினாலும் தாய்மண் ஒன்றையே மானமாய் கொண்டவர் முன் இதெல்லாம் தூசுதானே?!!! அதைப் புகட்டிச் சென்றவர் முதல் கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள். அவரின் தற்கொடை நாள் நினைவாகவே ஜீலை 5ம் திகதி கரும்புலி நாள் நினைவுகூரப் படுகின்றது..

TPN NEWS

SHARE