ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘இறைவன்’

25

‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இறைவன் படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘இறைவன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘இறைவன்’ படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘தனி ஒருவன்’ படத்தைத் தொடர்ந்து ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

maalaimalar

SHARE