ஜெயிலர் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினேன்- விநாயகனே கூறிய தகவல்

103

 

தமிழ் சினிமாவில் இப்போது வரும் படங்களில் நாயகனை தாண்டி வில்லன்கள் மக்களிடம் அதிக ரீச் பெறுகிறார்கள். ஒரே ஒரு உதாரணம் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்த விநாயகன்.

இந்த ஜெயிலர் திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்க ரஜினி மற்றும் பலர் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது.

ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 630 கோடி வசூலை தாண்டியுள்ளது.

படத்தில் ரஜினியை தாண்டி ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவகுமார், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விநாயகன் சம்பளம்
ரஜினிக்கு டப் கொடுக்கும் பயங்கர வில்லனாக நடித்த விநாயகன் இப்படத்திற்காக ரூ. 35 லட்சம் சம்பளம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

இதுகுறித்து நடிகரே ஒரு பேட்டியில், யாரோ சிலர் நான் ஜெயிலர் படத்திற்காக ரூ. 35 லட்சம் சம்பளமாக பெற்றேன் என்று கூறியுள்ளார்கள். நல்ல வேலையாக இது படத்தின் தயாரிப்பாளரின் கவனத்திற்கு சென்றிருக்காது என்று நம்புகிறேன்.

நான் ரூ. 35 லட்சத்தை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றேன், நான் என்ன சம்பளம் கேட்டேனோ அதை தயாரிப்பாளர் கொடுத்தார் என கூறியுள்ளார்.

 

SHARE