ஜோஷியின் இயக்கத்தில் மீண்டும் அமலா பால்.

386
மீண்டும் ஜோஷியின் இயக்கத்தில் அமலா பால், ஹீரோ மோகன்லா

அமலா பாலுக்கு திருமணம் நிச்சயமானதும் மலையாளத்தில் ஒரு படம் கமிட்டானது. பெயர் மிலி. சென்னையில் ஒருநாள் படத்தின் ஒரிஜினலான மலையாள ட்ராஃபிக்கை இயக்கிய ராஜேஷ் பிள்ளை இயக்கம். இது என்னுடைய கனவு கதாபாத்திரம் என்று மிலி குறித்து அப்போதே உணர்ச்சிவசப்பட்டிருந்தார் அமலா பால். இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு.

2012-ல் மோகன்லால் ஜோடியாக ஜோஷி இயக்கத்தில் ரன் பேபி ரன் படத்தில் அமலா பால் நடித்தார். மோகன் லால் கேமராமேனாகவும், அமலா பால் தொலைக்காட்சி நிருபராகவும் நடித்திருந்தனர்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே ஜோஷியின் இயக்கத்தில் லைலா ஓ லைலா படத்தில் இவர்கள் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். முந்தைய படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும் என்கிறார்கள்.

திருமணமான பிறகும் மலையாளத்தில் தொடர்ச்சியாக நடிக்கும் அமலா பால் சமுத்திரகனியின் படத்தில் மட்டும் ஏன் நடிக்கவில்லை? அமலா பால் முடியாது என்றாரா இல்லை திருமணமானதால் சமுத்திரகனி அமலா பால் வேண்டாமென்றாரா?

 

SHARE