ஜோதிகா மீண்டும் நடிப்பார் சூர்யா சூடான தகவல் 

346
ஜோதிகா மீண்டும் நடிக்க வருவது உறுதியாகியுள்ளது. இதை சூர்யாவே தெரிவித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. ஆனால் விளம் பர படங்களில் மட்டும் நடித்தார். அவரை மீண்டும் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் படாத பாடு பட்டனர். ஆனால் ஜோதிகா நோ சொல்லிவிட்டார். குடும்பத்தை கவனிப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்வது என பிசியாக இருந்தார். இப்போது அவரது குழந்தைகள் தியா, தேவ் வளர்ந்துவிட்டனர்.

இதனால் அவரை மீண்டும் சினிமாவுக்கு இழுக்க பலர் முயல்கின்றனர். சமீபத்தில் பாண்டிராஜ் ஒரு கதையை சொல்லியிருந்தார். அதில் ஜோதிகாவை நடிக்க வைக்க அவர் சூர்யாவிடம் பேசினார். இது குறித்து சூர்யா கூறுகையில், ஜோதிகா நடிப்பதற்கு எந்த தடையும் இல்லை. அவருக்காக நிறைய கதைகள் காத்திருக்கின்றன. அதில் சிறந்ததை அவர் தேர்வு செய்யும்போது ரசிகர்கள் விரும்புவது நடக்கும் என்றார்

 

SHARE