ஜோதிட கணிப்பின்படியே விராட் கோலியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்! அடுத்து இதுதானாம்

66

 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியின் வாழ்வில் நடப்பதை முன்கூட்டியே கணித்த ஒன்லைன் ஜோதிடர் ஒருவரின் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Stars and Astrology எனும் பேஸ்புக் பக்கத்தை ஒன்லைன் ஜோதிடர் ஒருவர் நிர்வகித்து வருகிறார். இவர் கோலியின் வாழ்வில் இந்த சம்பவங்கள் நடக்கும் என்று கணிப்புகளை தெரிவித்துள்ளார்.

இதுவரை அவர் கணிப்பின் படியே கோலியின் வாழ்க்கையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவர் 2016 ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி அன்று தமது பக்கத்தில் கோலி குறித்து 8 கணிப்புகளை வெளியிட்டார். அவற்றை என்னவென்று இங்கே காண்போம்.

கணிப்பு 1:
2016யில் வெற்றிகரமாக இருப்பார் என்றும், 2017ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் விராட் கோலி வெற்றிகரமாக இருப்பார் என்றார்.

அதன்படியே 2016ஆம் ஆண்டில் 2,595 ஓட்டங்கள் குவித்தார் கோலி. 2017யில் 2,818 ஓட்டங்கள் குவித்து தனது கிரிக்கெட் வாழ்வில் அதிக ஓட்டங்களை (ஓர் ஆண்டில்) எட்டியிருந்தார்.

கணிப்பு 2:
2017 மார்ச் அல்லது ஏப்ரலில் கோலியின் திருமணம் குறித்த பேச்சுகள் தொடங்கும் என்று கூறிய ஜோதிடர், 2018ஆம் ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் கணித்தார். அதன்படி 2017 டிசம்பரில் கோலிக்கு திருமணம் நடந்தது.

கணிப்பு 3:
கோலிக்கு பிப்ரவரி 2018யில் இருந்து செப்டம்பர் 2020க்குள் முதல் குழந்தை பிறக்கும் மற்றும் விளம்பர வருவாய் லாபம் தரும் என்றார்.

அதன்படியே கோலி சொந்தமாக சில Brand-களை உருவாக்கினார். ஆனால் குழந்தை 2021 ஜனவரியில் தான் பிறந்தது.

கணிப்பு 4:
ஜோதிடரின் கணிப்பின்படியே 2020 முதல் 2021 செப்டம்பர் வரை விராட் கோலி ஃபார்ம் அவுட் ஆனார்.

கணிப்பு 5:
2025ஆம் ஆண்டு வரை கோலி கிரிக்கெட் மற்றும் வருமானத்தில் உச்சம் தொடுவார் எனக் கூறப்பட்டது. அதன்படியே தற்போது கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

கணிப்பு 6:
2024ஆம் ஆண்டுக்குள் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு கணிப்பின்படியே இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது.

கணிப்பு 7:
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை 2025 ஆகத்து முதல் 2027 பிப்ரவரி வரை சரிவை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கணிப்பு 8:
விராட் கோலி 2027ஆம் ஆண்டு முதல் மீண்டும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவார் என்றும், 2028ஆம் ஆண்டு மார்ச்சில் பாரிய புகழுடன் ஓய்வு பெறுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

SHARE