ஜோர்டானிய விமானியை உயிருடன் எரித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

373

 

ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த விமானிக்கு பதிலாக தம் பிடியில் இருந்த கைதியை விடுவிக்க ஜோர்டான் தயாராக இருந்தது. ஆனால் தமது விமானி உயிருடன் உள்ளார் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் தேவை என்று ஜோர்டான் கேட்டிருந்தது.

இந்த விடியோ, ஐ.எஸ் தீவிரவாதிகளின் பரப்புரைத் தளம் என்று நம்பப்படும் ஒரு டுவிட்டர் தளம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜோர்டான் விமானி பயணித்த விமானம் ஐ.எஸ்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கிய பின் விமானி பிடிபட்டார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரு பிணைக் கைதிகளை இஸ்லாமிய அரசு அடுத்தடுத்து கொன்றுள்ள நிலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

SHARE