ஜோர்டான் விமானியை கொல்வதற்கு முன்பு அவருக்கு மயக்க மருந்து அளித்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் சிறைபிடித்து வைத்திருந்த ஜோர்டான் விமானியை இரும்பு சிறையில் வைத்து உயிருடன் தீயிட்டு கொழுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஜோர்டன் மட்டுமின்றி உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனவே தீவிரவாதிகளின் இக்கொடூர செயலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தங்கள் நாட்டின் விமானியை கொன்ற தீவிரவாதிகளை பழித்தீர்க்கும் வகையில் ஜோர்டான் அரசு சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளின் நிலையங்கள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இந்நிலையில் தீவிரவாதிகள் விமானியை கொன்றது தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தீவிரவாதிகள் கூறியதாவது, விமானி உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நாங்கள் அவருக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக, அவரை கொல்வதற்கு முன்பு மயக்க மருந்தை கொடுத்து கொலை செய்தோம் என கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு சிறிது வலி இருந்திருக்க கூடும் என பிற நாடுகளின் தரப்பில் கூறப்படுகிறது. |