ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 221 பேரில் 59 இலங்கை ஊழியர்களை அவர்களது சம்பள நிலுவைகள், சமூகப் பாதுகாப்பு சலுகைகள் மற்றும் பிற உரிமைகளுடன் வெற்றிகரமாக ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் திருப்பி அனுப்பியுள்ளது.
ஜோர்தான் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து எஞ்சிய இலங்கை ஊழியர்களை முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்பும் முயற்சிகள் தொடரும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் எஞ்சியிருக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன் அவர்கள் நாடு திரும்பும் வரை உறுதி செய்யப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது.